Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

Advertiesment
war
அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.. அதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவர் மட்டுமல்ல அவரின் குடும்பத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் அதற்கு தாக்குதலில் பலியானதாக சொல்லப்படுகிறது..

இதனால் கோபமடைந்த ஈரான் பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படை தளங்கள் அமைந்திருக்கும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது..

சவுதி அரேபியாவில் சில இடங்களை ஈரான் ராணுவம் தாக்கியது.. புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் சில நட்சத்திர ஹோட்டல் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.. இந்நிலையில்,  ஈரான் விமானம் என நினைத்து தவறுதலாக மூன்று அமெரிக்க விமானங்களை குவைத் வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்.. அதேநேரம் அதிலிருந்து ஆறு விமானங்கள் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார்கள்..

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டுப்பாட்டகம் ‘ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் Operation Epic Fury-க்கு ஆதரவாக பங்கேற்று வந்த அமெரிக்க நாட்டின் மூன்று F-15 போர் விமானங்கள் குவைத்தின் தவறுதலான தாக்குதலால் விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானிகள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்’ என கூறியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...