Publish Date: Mon, 02 Mar 2026 (16:52 IST)
Updated Date: Mon, 02 Mar 2026 (17:02 IST)
அணு ஆயுதம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்தது.. அதில் ஈரான் அதிபர் கமேனி கொல்லப்பட்டார்.. இது ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்திருக்கும் இடங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.. மேலும், துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரோம்கா மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் பிரதமர் அலுவலகத்தில் என்ன சேதம்? நெதன்யாவுக்கு ஏதேனும் ஆயிற்றா? என்கிற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் பிரதமரின் அலுவலகமே தாக்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடமும், இஸ்ரேல் நாட்டு மக்களிடமும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மட்டுமல்லாமல் விமானப்படை தளபதி அலுவலங்களையும் தாக்கியதாக ஈரான் தெரிவித்திருக்கிறது. அதோடு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டும் வளைகுடா நாடுகளின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறி, ட்ரோன் ஆயுதகிடங்கு தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு ஈரான் எச்சரித்திருக்கிறது.