Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடங்கியது மோகன்லால் படத்தின் ரீமேக் பணிகள்!

தொடங்கியது மோகன்லால் படத்தின் ரீமேக் பணிகள்!
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:50 IST)
மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ப்ரோடாடி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று  ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட  பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். குறுகிய கால படமாக உருவான இந்த படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.

நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வழ்ககம்போல எந்த மோகன்லால் படம் வந்தாலும் ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கும் தெலுங்கு சினிமா உலகினர், இந்த படத்தையும் ரீமேக் செய்ய உள்ளனர். தெலுங்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷும், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சின்னக்கவுண்டர் 2’ படத்தில் இந்த நடிகரா?