யாருடா இவன்! இவ்வளவு பிரச்சினைக்கு நடுவுல சிப்ஸ் சாப்பிடுறது! – மீம் மெட்டீரியலான சண்டை!

திங்கள், 13 ஜனவரி 2020 (14:21 IST)
இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளரும், கடைக்காரரும் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள பிரபல உணவகமான கென்ஸ் கெபாப் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்தபோது கடை ஊழியருக்கும் அவருக்கு இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. வாக்குவாதம் சண்டையாக உருமாற இருவரும் கையில் கிடைத்தவற்றை வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை கண்ட மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஓடி சென்று இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சித்து கொண்டிருந்தனர்.

ஆனால் இவ்வளவு களேபரம் நடந்தபோதும் ஒருவர் ஹாயாக அமர்ந்து கொண்டு அந்த சண்டையை ஏதோ படம் பார்ப்பது போல பார்த்துக்கொண்டு அவரது சிப்ஸை சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சிப்ஸ் சாப்பிடும் அந்த மனிதரை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸை பறக்க விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

pic.twitter.com/hXTWLsKQfI

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட வேண்டும் - பாஜக தலைவர்