Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரண்மனையை விட்டு வெளியேறும் இளவரசர்: ராணி அவசர கூட்டம்!

Advertiesment
அரண்மனையை விட்டு வெளியேறும் இளவரசர்: ராணி அவசர கூட்டம்!
, திங்கள், 13 ஜனவரி 2020 (08:54 IST)
அரண்மனையை விட்டும் , இளவரசர் பதவியை விட்டும் வெளியேற போவதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி. இங்கிலாந்து இளவரசரான இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகை மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அரண்மனையிலிருந்தும், அரச பதவிகளிலிருந்தும் வெளியேறி சாதாரண மக்கள் வாழும் வாழ்க்கையை வாழ போவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், தந்தை சார்லஸ் உள்ளிட்டவர்களை கலந்தாலோசிக்காமலே ஹாரி இந்த முடிவை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாரியின் இந்த முடிவு குறித்து ஆலோசனை செய்ய ராணி எலிசபத்தின் தலைமையில் அரச குடும்பத்தினர் கூட்டம் இன்று கூட உள்ளது.

ஹாரியின் மனைவி மேகன் அரச பரம்பரையை சேர்ந்தவர் இல்லை என்பதால் அவரை அரச குடும்பத்தினர் கீழ்மை படுத்தியதாகவும் அதனாலயே ஹாரி இந்த முடிவை எடுத்ததாகவும் இங்கிலாந்து வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடல் அடைப்பான் நோய்க்கு அறுவைசிகிச்சை; தொப்புள் வழியாக வெளியேறிய மலம் – சிறுவனுக்கு மறுவாழ்வு கொடுத்த அரசு மருத்துவர்கள் !