டிக் டாக்கிற்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் ஃபேஸ்புக்..

Arun Prasath

ஞாயிறு, 12 ஜனவரி 2020 (17:28 IST)
டிக் டாக் செயலிக்கு போட்டியாக லஸ்ஸோ என்னும் செயலியை இந்தியாவில் இந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

டிக் டாக் செயலி உலகமெங்கும் உள்ள சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களால் மிகவும் கவரப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இதற்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லஸ்ஸோ என்னும் செயலியை அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்தியாவில் இந்த ஆண்டு வருகிற மே மாதம் லஸ்ஸோ அறிமுகப்படுத்தவுள்ளதாம். லஸ்ஸோவை வாட்ஸ் ஆப் உடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 35 சிவசேனா எம்.எல்.ஏக்கள் அதிருப்தி: மகாராஷ்டிராவில் மீண்டும் பரபரப்பு!