அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்.. டிரம்ப் உடன் மோதுகிறார் கமலா ஹாரிஸ்..!

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (07:27 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் கமலஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிட போகிறார் என்றும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பதும் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வயது மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனை ஜோ பைடன் ஏற்றுக்கொண்டு அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்க அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம், எஞ்சி இருக்கும் பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமையில் முழு ஆற்றலை செலுத்துவேன், கமலா ஹாரிஸ் தான் அதிபருக்கு சரியான போட்டியாளர், அவருக்கு அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கமலா ஹாரிஸ் டிரம்புக்கு எதிராக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments