Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா.! தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்..!!

அமெரிக்கா அதிபர் ஜோ  பைடனுக்கு கொரோனா.! தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்..!!

Senthil Velan

, வியாழன், 18 ஜூலை 2024 (08:03 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
உலகையே ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்றால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் இந்திய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலையொட்டி லாஸ் வேகாஸில் ஜோ பைடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்றினை உறுதி செய்தனர்.
 
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில்,  அதிபர் பைடன் கொரோனா தடுப்பூசி ஏற்கனவே செலுத்தியுள்ளார் என்றும் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு டெலாவேரில் தனிமையாக தங்கியிருப்பார் என்றும் அங்கிருந்த படி அலுவலக பணியினை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அதிபர் பைடனுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளதாக பைடனின் பிரத்யேக மருத்துவர் கூறியுள்ளார். இவர் ‛பாக்ஸ்லோவிட்' கொரோனா தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக் கொண்டதால் இவருக்கு கொரோனா பாதிப்பால் பிரச்னை வர வாய்ப்பில்லை என்றும் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு இது வரை அதிபருக்கு இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!