Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டம்.. நாளை அனைவரும் எதிர்பார்க்கும் பட்ஜெட்..!

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (07:22 IST)
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது என்பதும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் 18 வது மக்களவையின் புதிய எம்பிக்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நடந்தது. இதனை அடுத்து பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்கிறார், நாளை அவர் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து உள்ள நிலையில் இன்று அவர் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மசோதாக்களும்  இந்த பட்ஜெட் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments