Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகலா.?

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகலா.?

Senthil Velan

, சனி, 20 ஜூலை 2024 (11:52 IST)
தேர்தல் பிரச்சாரத்தில் தடுமாறி வருவதால் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகுவது குறித்து அவரது குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அமெரிக்காவில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் அதிபராக இருந்த குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் அதிபராக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. 

இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார்.  அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுவேன் ஜோ பைடன் என பிடிவாதமாக உள்ளார்.
 
ஆனால் ஜோ பைடனுக்கு இப்போது 81 வயது ஆகிறது. அதோடு அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர். ஆனால் ஜோ பைடன் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உடன் ஜோ பைடன் நேரடி விவாதத்தில் பங்கேற்றார். இதில் ஜோ பைடன் சரியான வாதங்களை முன்வைக்கவில்லை. இதுவும் அவருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஜோ பைடன் கட்டாயம் அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் விலக வேண்டும் என்று  முன்னாள் அதிபர் பராக்  ஒபாமா உள்ளிட்ட ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகுவது குறித்து அவரது குடும்பத்தினர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடல்.! மூடிய உணவகங்களை திறந்திடுக.! இபிஎஸ் ஆவேசம்.!!