அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பிடன் தனது குழுவிலிருந்து இரண்டு இந்திய வம்சாவளியினரை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு அதிபராக பதவியேற்றுள்ளவர் ஜோ பிடன். இவரது ஆலோசனை குழுவில் இந்திய வம்சாவளியினருக்கும் முக்கிய இடம் அளிக்கப்பட்டதால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு ஜோ பிடனால் பலமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தனது குழுவில் இருந்த சோனல் ஷா, அமித் சானி என்ற இரு இந்திய வம்சாவளியினரை ஜோ பிடன் நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்காகதான் அவர் இந்திய வம்சாவளியினரை இணைத்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால் நீக்கப்பட்டதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.