Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு

Advertiesment
நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
, சனி, 23 ஜனவரி 2021 (15:28 IST)
ஆஸ்திரெலியா அணியை வீழ்த்தி  டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணியைச் சேர்ந்த விரர்கள் 6 பேருக்கு மகேந்திர கார் நிறுவனத்தலைவர் ஆனந்த் மகேந்திர தார் கார் பரிசளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டத்தின் 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் விறுவிறுப்பாக நடைபெற்றது. 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பாக இருந்தன.

4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவின் வெற்றி இலக்கு 328 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் களமிறங்கிய இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 91 ரன்களும், புஜாரா 56 ரன்களும் எடுத்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர். இந்நிலையில் நேற்று மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்த ஆட்டத்தில் ஆரம்பம் மெதுவாக சென்றாலும் அதிரடியாக களம் இறங்கிய வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட் ரன்களை கடகடவென குவிக்க தொடங்கினர். இடையில் வாஷிங்டன் சுந்தர் அவுட் ஆனாலும் நிதானமாக விளையாடிய ரிஷப் பண்ட் நாட் அவுட் ஆகாமல் 89 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஒருநாள் தொடர் போல விருவிருப்பாக சென்ற இந்த தொடரில் இந்தியா வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இளம் வீரர்க்ளைக்கொண்ட இந்திய அணியின் வெற்றிக்கு இளம் நட்சத்திரங்கள் நடராஜன், ஷர்துல் தாகூர், சிராஜ், வாஷிங்டன் சுந்தர்,  நவ்தீவ் சைனி மற்றும் கில் ஆகிய 6 பேர் முக்கிய பங்காற்றினர்.

எனவே இவர்களுக்கு பlவேறு துறையினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில் மகேந்திர வாகன தலைவர் இவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த 6 வீரர்களுக்கும்  அந்நிறுவனத்தின் உயர்ந்த விலையுள்ள காரான தார் கார் பரிசளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட புதிய உடல்தகுதி தேர்வு!