அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ள நிலையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள அதிசய பொருள் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன். பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே கடந்த 20ம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
அதை தொடர்ந்து ட்ரம்ப் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட முடிவுகள், மாற்றங்களால் உருவான பிரச்சினைகளை சரிசெய்வதில் தீவிரம் காட்டி வருகிறார் ஜோ பிடன். இந்நிலையில் தற்போது அதிபர் அலுவலகத்தில் கூட நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் அலுவலகத்தில் புதிய பொருள் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
1972ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா அப்போலோ மிஷன் மூலமாக நிலவில் இருந்து சேகரித்து வந்த கல் ஒன்று புதிதாக அதிபர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.