Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தைப்பூசம் நாளில் செய்யவேண்டிய பூஜைமுறைகள் என்ன தெரியுமா...?

Advertiesment
தைப்பூசம் நாளில் செய்யவேண்டிய பூஜைமுறைகள் என்ன தெரியுமா...?
தைப்பூசம் நாளில் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, வீட்டில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம்.

குறிப்பாக முருகப்பெருமானை வழிபட்டு, கந்த கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த, கலிவெண்பா உள்ளிட்ட  முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்.
 
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம்  போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில்  பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
 
தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருக பெருமானுக்கும் விசேஷமானது. பூச நட்சத்திரத்தின் அதி தேவதையான குருபகவானுக்கும் விசேஷமானது. அன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
 
தைப்பூசத்தன்று தான் உலகத்தின் முதல் உயிப்பு சக்தியான தண்ணீர், சிவபெருமானால் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகியவையும், அடுத்தடுத்து அனைத்து உயிரினங்களும் தோற்றுவிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயற்கை வழிபாட்டில் சூரியனுக்கே முதல் வழிபாடு ஏன்...?