பழிக்கு பழி.. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்! கத்தார் மக்கள் அச்சம்..!

Siva
செவ்வாய், 24 ஜூன் 2025 (07:54 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், திடீரென இந்த மோதலில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த சனிக்கிழமை அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் புகுந்து, மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்தது. இதனால் உலகப் போர் மூளும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
 
இந்தத் தாக்குதலில் 19 ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தார் அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஏவுகணை தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என்றும் கூறியுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில், கத்தாரில் பெரும் வெடிச் சத்தம் கேட்டு, வணிக வளாகங்களில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது கத்தார் மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்றும், இப்போதைக்கு போர் நிறுத்தம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தம் இல்லை என்றும் ஈரான் அறிவித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பரபரப்பு நிலவுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஆர் பாலுவை நானே குறுக்கு விசாரணை செய்ய போகிறேன்: அண்ணாமலை பேட்டி..!

வங்கக்கடல் சுழற்சி: இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; நாளையும் மழை பெய்யும்..!

கணவன், மனைவி, ஒன்றரை வயது குழந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை.. செய்தி கேட்ட பாட்டி மாரடைப்பால் மரணம்..!

செவிலியர்களின் பாலியல் துன்புறுத்தல் புகார்: எய்ம்ஸ் டாக்டர் சஸ்பெண்ட்..!

ஆர்.எஸ்.எஸ்ஸும் தலிபானும் ஒரே மனநிலை: சித்தராமையாவின் மகன் சர்ச்சை பேச்சு; கொந்தளிக்கும் பா.ஜ.க!

அடுத்த கட்டுரையில்
Show comments