Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் விருந்தினரை தாக்குவதா?!.. திமிருக்கு முடிவு கட்டுவோம்!.. அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்..

Advertiesment
war
அணு ஆயுதம் தொடர்பாக எழுந்த போரில் ஈரான் நாட்டை இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்கி வரும் நிலையில், தற்போது போர் தீவிரமடைந்திருக்கிறது. அமெரிக்க ராணுவ தளங்கள் நிறுவப்பட்டிருக்கும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் அரசு தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.. சவுதி அரேபியா, துபாய் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேயும் தாக்குதல் நடக்கிறது.. விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் அதிகரித்து வருகிறது..

இந்நிலையில், இந்தியாவில் பயிற்சி நடத்திவிட்டு ஈரானுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த ஈரானின் Dena போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் ஒரு மிகப்பெரிய கடற்படை பயிற்சி சமீபத்தில் நடந்தது.  அந்த பயிற்சியில் ஈரான் சார்பாக கலந்து கொண்ட Dena  போர்க்கப்பலைதான் அமெரிக்கா தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு ஈரான் அரசை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரான் கடற்கரையில் இருந்து 2 ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள கடலில் அமெரிக்கா இந்த அட்டூழியத்தை செய்திருக்கிறது..  இந்திய கடற்படை விருந்தினரான போர்க்கப்பலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்கா தாக்கியிருக்கிறது.. இதற்காக அமெரிக்கா வருத்தப்பட வேண்டிய நிலை உருவாகும்’ என ஈரானி அமைச்சர் அராச்சி தெரிவித்திருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஃபர் கொடுத்து கூட்டணிய உடைக்க பார்த்தாங்க!... தவெகவை தாக்கிய ஸ்டாலின்!...