செயற்கைக்கோளை செலுத்துவதில் மீண்டும் தோல்வி! – ஏமாற்றத்தில் ஈரான்!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (08:47 IST)
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஈரான் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி மிக தீவிரமாக அதன் உச்சத்தை எட்டி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் நாசா உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னணியில் உள்ள நிலையில் இந்தியாவின் இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் நிலவுக்கு சந்திராயன் அனுப்பும் அளவு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

இந்நிலையில் ஈரான் போன்ற நாடுகளுக்கு சொந்தமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்துவதே சிரமமான காரியமாக உள்ளது. ஈரானுடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா திரும்ப பெற்றது முதலாக ஈரான் அனைத்து துறைகளிலும் தங்களது முன்னேற்றத்தை காட்ட பெரிதும் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 3 சாதனங்களுடன் கூடிய செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த தேவையான வேகத்தில் ராக்கெட்டால் செல்ல முடியாததால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் இவ்வாறாக ஒரு செயற்கைக்கோளை செலுத்தும் ஈரானின் திட்டம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments