Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (17:20 IST)
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் நீடிக்குமா என்று தெரியவில்லை என ரஷ்யா கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரான் - இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகத்தகவல்கள் வெளியாகின. ஆனால், போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த போர் நிறுத்தம் நீடிக்குமா என்பது நிச்சயமாக தெரியவில்லை என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா இஸ்ரேல் நாட்டிடமும், கத்தார் ஈரான் நாட்டிடமும் அமைதி பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் தாக்குதல்கள் நடந்துள்ளதால், "போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவது சாத்தியமானதல்ல. இப்போது எந்த முடிவையும் கூற முடியாது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

நாட்டு மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்: பிரதமர் மோடி

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments