Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து அமைச்சரவையில் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மருமகன்

Advertiesment
இங்கிலாந்து அமைச்சரவையில் ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மருமகன்
, வியாழன், 11 ஜனவரி 2018 (06:03 IST)
தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று ஒருசிலர் கூறிவரும் நிலையில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முக்கிய பதவிகளில் வகித்து வருகின்றனர். இந்த நிலையில்  இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி வழங்கியுள்ளார்

இங்கிலாந்து அமைச்சரவையில் துணை மந்திரி பதவி பெற்றுள்ள ரிஷி சுனக் மற்றும் சுயல்லா பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது குறித்து நடந்த பொதுவாக்கெடுப்பின்போது பிரதமருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான ரிஷி சுனக் என்பவர் ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின்  மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டவர் என்பதும் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வீட்டு வசதித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டுள்ளது.

இன்னொரு மந்திரியான 37 வயதான சுயல்லா பெர்னாண்டஸ் என்பவர் கோவாவை பூர்வீகமாக கொண்ட பெண் ஆவார். இவர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆக இருந்து வருகிறார். இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் திருநாள்: பள்ளிகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி விடுமுறை