Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் திருநாள்: பள்ளிகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி விடுமுறை

Advertiesment
pongal
, வியாழன், 11 ஜனவரி 2018 (04:55 IST)
இந்த ஆண்டு போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வருகிறது. மேலும் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் திங்கள் செவ்வாய் வருவதால் உண்மையில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக் காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்தோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக, வருகின்ற 12.01.2018 (வெள்ளி) அன்று விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜனவரி 12ஆம் தேதி வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு