Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தோனேசியா நிலநடுக்கம்; 310 பேர் பலி! – தோண்ட தோண்ட சடலங்கள்!

Advertiesment
indonesia
, சனி, 26 நவம்பர் 2022 (08:20 IST)
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன. கடந்த 21ம் தேதி ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 310 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 24 பேரை காணவில்லை என தேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 56,320 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுதவிர 31 பள்ளிகள், 124 வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளும் சேதமடைந்துள்ளது. மீட்பு பணிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலான வீடுகள் மீண்டும் கட்டித் தரப்படும் என அந்நாட்டு அதிபர் விடோடோ கூறியுள்ளார்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் வரலாறு: ராணுவ ஜெனரல் பதவி வகித்தவர்கள்