இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சாலமன் தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் பகுதியில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ள நிலையில் இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி மறைவதற்கு அடுத்து சாலமன் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பசிபிக் கடலில் உள்ள ஓஷியானியா தீவு கூட்டங்களில் உள்ள மேற்கு மலாங்கோ பகுதியில் ரிக்டர் 7 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.