இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அமெரிக்க அதிபர் கால் தவறி விழ இருந்தபோது இந்தோனேஷிய அதிபர் அவரை தாங்கி பிடித்தார்.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று தொடங்கி விமரிசையாக நாடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா என 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று மாநாட்டின் ஒரு பகுதியாக பாலி நகரில் உள்ள புகழ்பெற்ற மாங்குரோவ் காடுகளை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ சுற்றி காட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு சில மரக்கன்றுகளை நட்ட அவர்கள் அங்குள்ள கோவில் ஒன்றை சுற்றி பார்க்க சென்றனர். அப்போது படிக்கட்டில் ஏறும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கால் தவறி நிலை குலைந்தார். உடனடியாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அவரை தாங்கி பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.