Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை.. வேலை தேடிய நபருக்கு நேர்ந்த சோகம்..!

Mahendran
திங்கள், 20 ஜனவரி 2025 (15:57 IST)
அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு வேலை தேடிய இந்திய இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த ரவி தேஜா என்ற இளைஞர், முதுகலை படிப்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு அவர் தனது படிப்பை முடித்த பின்னர் அங்கேயே தங்கிருந்து வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில், வாஷிங்டன் அவென்யூ என்ற பகுதியில் அவர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் அவரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

இது குறித்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், அவரது தந்தை செய்தியாளர்களிடம் இந்த தகவலை கூறினார்.

குடும்பத்திற்கு கிடைத்த முதல் கட்ட தகவலின் படி, ரவிதேஜா சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை.. இன்று நிறைவேற்றம்..!

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை.. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு என்ன தண்டனை?

வளர்ச்சி வேண்டுமென்றால் சிறிய பாதிப்புகள் வரதான் செய்யும்! - பரந்தூர் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

கழிவு நீர் டேங்கில் விழுந்து சிறுமி பலியான சம்பவம்.. 16 நாட்களுக்குப் பின் பள்ளி திறப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments