அமெரிக்காவில் இருந்த இந்திய வம்சாவளியினரான கபில் ரகு, தான் வைத்திருந்த "ஓபியம்" என்ற பெயரிடப்பட்ட வாசனை திரவியத்தை, காவல்துறையினர் போதைப்பொருள் என தவறுதலாகக் கருதி கைது செய்ததால் பெரும் சிக்கலை சந்தித்துள்ளார்.
சாதாரண வாகன தணிக்கையின்போது கைது செய்யப்பட்ட ரகு, அது வாசனை திரவியம்தான் என நிரூபித்த பின்னரும், குடிவரவு ஆவணச் சிக்கல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டில் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். போதைப்பொருள் குற்றச்சாட்டு மே 20 அன்று கைவிடப்பட்டாலும், ரகுவின் அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டு, தற்போது அவர் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலில் உள்ளார்.
விசா ரத்தானதால் வேலை செய்ய முடியாத நிலையில், ரகுவின் மனைவி ஆலே மேஸ், குடும்பத்தின் சட்ட செலவுகளுக்காக சேமிப்புப் பணத்தை இழந்ததுடன், தற்போது சிரமங்களை சந்தித்து வருகிறார். ஒரு சின்ன தவறான செயலால் குடும்பம் உணர்வுரீதியாகவும் நிதி ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரகு தனது விசா நிலையை மீட்டெடுக்க சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.