Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

Mahendran
சனி, 7 ஜூன் 2025 (16:48 IST)
இந்தியா–பாகிஸ்தான் இடையே இருந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், முக்கிய ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் மணல் தெரியும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்திய அரசு திடீரென சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் இதுவரை இந்தியாவுக்கு நான்கு கடிதங்கள் அனுப்பி உள்ளது. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடும் வரை தண்ணீர் திறந்து விட முடியாது என இந்தியா உறுதியாக கூறியுள்ளது.
 
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள முக்கிய நதிகள் தண்ணீர் இன்றி வறண்டு இருப்பதாகவும், மணல் தெரியும் அளவுக்கு தண்ணீர் வற்றிவிட்டதாகவும், ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் தற்போது தண்ணீர் பஞ்சம் பிரச்சனையால் தத்தளித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 
இதனால், பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments