ரஷ்யாவுக்கு ஆதரவுகோராமல் புறக்கணித்த இந்தியா & சீனா!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (08:34 IST)
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா மற்றும் சீனா புறக்கணிப்பு.

 
கடந்த சில மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது என்பதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் ரஷ்யாவுடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது. இதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு நகரங்களும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதை ஒட்டி மாஸ்கோவில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. லுகான்ஸ்க்கிலும் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தது. உக்ரைனின் எல்லைகளில் ரஷியாவால் கொண்டுவரப்பட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது மற்றும் உக்ரைனில் இருந்து ரஷியா உடனடியாக படைகளை வாபஸ் பெறுமாறு அந்த தீர்மானத்தில் கோரப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா மற்றும் சீனா புறக்கணித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன என்பது கூடுதல் தகவல்.

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments