உக்ரைன் நாட்டை நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது என்பதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் நான்கு உக்ரைன் நகரங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நான்கு நகரங்களையும் ரஷ்யாவுடன் இணைக்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் 96 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்
இதனை அடுத்து இந்த நான்கு நகரங்களும் விரைவில் ரஷ்யாவுடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது.இதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சற்று முன்னர் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நான்கு நகரங்களும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.