Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டவில்லை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (08:27 IST)
தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டியதற்கான எந்த விதமான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சிறு வயதில் இருந்தே அனைவரும் தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான்  தான் என்று படித்து வரும் நிலையில் திடீரென தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து இதுகுறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ராஜ்னீஷ் என்பவர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார் 
 
ஏற்கனவே ராஜ்னீஷ் தாஜ்மஹால் குறித்து தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்ட நிலையில் தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா? விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments