பாகிஸ்தான் தேர்தலில் 117 இடங்களை கைப்பற்றியுள்ள இம்ரான்கானின் கட்சி, சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட்டம், ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு முன்னதாக பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பார் என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் நேமுல் ஹவக், நாங்கள் தொடர்ந்து சுயட்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் விரைவில் எங்களுடன் இணைவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதோடு, இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அவரை பற்றி பின்வருமாறு பேசியுள்ளார். 2013 ஆம் ஆண்டு, இம்ரான் கான், நவாஸ் ஷெரிப் குறித்துக் கூறும்போது அவரும் ஆட்சியதிகாரத்தின் ஆதரவில் வாழ்பவர் என்று கூறினார்.
எனவே இந்தமுறை ராணுவ அதிகாரம் தன் பவரை பயன்படுத்த திட்டமிட்டு இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்துள்ளது. நவாஸ் ஷெரீப் இந்தியா, சீனா கொள்கைகளில் தனித்து இயங்க முயன்றார், இது ராணுவத்துக்கு அதிருப்தி அளித்தது.
இப்போது இம்ரான் மிகவும் பொருத்தமான ஒரு பொம்மை, ஒரு கைப்பாவை. சிக்கலான விஷயங்களில் அவருக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது, ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடந்தாக வேண்டும் என கூறியுள்ளார்.