நீங்கள் ஏராளமான வெறுப்புணர்வுடன் அதிகப்படியான ஊடுருவல் சம்பங்கள் நடக்கும்போது, பேச்சுவார்த்தை நடைபெறுவது மிகவும் கடினம் என நினைக்கிறேன் என்று பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அசாருதீன் அறிவுரை கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றது. அவர் பிரதமராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசாருதீன் இம்ரான் கானுக்கு அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
ஒரு கிரிக்கெட் வீரர் மிகவும் அரிதான் ஒரு நாட்டின் பிரதமரானதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்குவதை போன்று நாட்டை தலைமையேற்று வழிநடத்துவது இயலாது. எனினும் தான் வேறுபட்ட அரசியல்வாதி என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.
அவருடைய நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன. அதை அவர் முதலில் தீர்க்க வேண்டும். பின்னர்தான் மற்ற பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் நீங்கள் ஏராளமான வெறுப்புணர்வுடன் அதிகப்படியான ஊடுருவல் சம்பங்கள் நடக்கும்போது, பேச்சுவார்த்தை நடைபெறுவது மிகவும் கடினம் என நினைக்கிறேன்.
முதலில் அந்த விஷயங்களை நிறுத்துங்கள் பின்னர் இந்தியா உடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.