Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்துஜா குழுமங்களின் தலைவர் ஸ்ரீசந்த் பரம்சந்த் காலமானார்

Advertiesment
hinduja chairman
, புதன், 17 மே 2023 (23:00 IST)
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இந்துஜா குழுமம். இதன் தலைவர் ஸ்ரீசந்த்  பரம்சந்த் இன்று காலமானார்.

லண்டனை தலைமையிடமாகக்  கொண்டு செயல்படும் நிறுவனம் இந்துஜா குழுமம். இந்த நிறுவனம் கடந்த 1914 ஆம் ஆண்டு பரமானத் தீப்சந்த் இந்துஜா என்பவர் தொடங்கினார். முதலில் மும்பையில் தலைமையிடம் இருந்த நிலையில், பின்னர், 1919 ஆம் ஆண்டு ஈரானுக்கு மாற்றப்பட்டது.

தற்போது, லண்டனை தலைமையிடமாகக்  கொண்டு இந்துஜா குழுமம்.  செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பிரபல வாகனம் அசோக் லேலண்ட், இண்டஸ் இந்து வங்கி, ஹிந்துஜா வங்கி( சுவிட்சர்லாந்து)  ஆகியவை ஆகும்.

இந்த நிலையில், இந்துஜா குழும தலைவரும் இந்துஜா குடும்பத்தின் மூத்தவருமான ஸ்ரீசந்த் பரம்சந்த் இந்துஜா உடல் நலக்குறைவு காரணமாக இன்று லண்டனில் அவர்  காலமானார் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.  அவருக்கு வயது 87 ஆகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 வயது மூத்த ஆசிரியையுடன் காதல்..இளைஞர் எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு...