தலைநகர் டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர்இந்திய விமானம் ஒன்று நடுவானில் குலுங்கியது. இதில், பயணிகள் காயமடைந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து ஏ.ஐ. 302 என்ற எண் கொண்ட ஏர்இந்திய விமானம் ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் கிளம்பி நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாரா விதமாக திடீரென்று குலுங்கியது.
இதில், விமானத்தில் பயணம் செய்த, 7 பயணிகள் லேசான காயமடைந்துள்ளனர். அப்போது, விமானத்தில் பயணித்த மருத்துவர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட முதலுதவிப்பெட்டி ஆகியற்றின் மூலம் விமான ஊழியர்கள் காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இதையடுத்து, விமானம் சிட்னி விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், ஏன் இந்திய விமானத்தின் மேலாளர் காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி செய்து கொடுத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்திய விமானம் ஒன்று நடுவானில் குலுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.