ஹிண்டன்பர்க் குறிவைத்த இன்னொரு நிறுவனம்.. ஒரே நாளில் 9% வீழ்ச்சி அடைந்த பங்குகள் விலை..!

Siva
புதன், 28 ஆகஸ்ட் 2024 (16:18 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க்  நிறுவனம் சமீபத்தில் அதானி நிறுவனம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தன. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில நாட்களில் பங்குகள் மீண்டும் உயர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிறுவனம் குறித்து ஆய்வு செய்து அந்த நிறுவனத்தில் தவறு நடந்தால் அதை அறிக்கையாக ஹிண்டன்பர்க்  நிறுவனம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை ஷார்ட் செய்து வைத்து அறிக்கை வெளியிட்டவுடன் பங்குகள் குறைந்த உடன் அதிக லாபம் பார்த்து வருகிறது.

அதானி நிறுவனத்தை இரண்டு முறை குறிவைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது அமெரிக்காவில் உள்ள சூப்பர் மைக்ரோ என்ற நிறுவனத்தை குறி வைத்துள்ளது. ஏஐ சம்பந்தப்பட்ட நிறுவனமான சூப்பர் மைக்ரோ நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில் நேற்று ஒரே நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் ஒன்பது சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்-1பி விசா கட்டண உயர்வு: அமேசான், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு?

விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்: வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி..!

"சொன்னதைச் செய்தார்களா?" திருச்சியை அடுத்து நாகையிலும் பட்டியலிட்ட விஜய்..!

இந்த பூச்சாண்டி எல்லாம் வேண்டாம்.. கெத்தாக தேர்தலை சந்திக்க வாருங்கள்: ஸ்டாலினுக்கு விஜய் சவால்..!

சென்னையில் பெண்கள் நடத்திய போலி கால்சென்டர்கள்: 42 சிம்கார்டுகள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments