Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

Siva
ஞாயிறு, 23 மார்ச் 2025 (10:25 IST)
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள லாஸ் குரூசெஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு பூங்காவில், இரவு 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 19 வயதுடைய இரு இளைஞர்களும், 16 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர். மேலும்,   14 பேர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். அவர்கள் நகரில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் நடைபெற்ற போது, அங்கிருந்த சிலர் வீடியோ பதிவுகளை எடுத்திருந்ததால், அதைப் பயன்படுத்தி காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயன்று வருகின்றனர்.
 
இச்சம்பவம் குறித்து, லாஸ் குரூசெஸ் நகரின் மேயர் ஜோஹன்னா பென்கோமோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் நகரத்தில் இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கச் நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்.. போக்குவரத்து துறை வெளியிட்ட நெறிமுறைகள்..!

நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments