Publish Date: Wed, 01 Sep 2021 (12:30 IST)
Updated Date: Wed, 01 Sep 2021 (12:31 IST)
கொரோனா காரணமாக தனது பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை கூகிள் அடுத்த ஆண்டு வரை நீடித்துள்ளது.
கடந்த ஆண்டு முதலாக கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. சமீப காலமாக கொரோனா குறையும்போது ஐ.டி நிறுவனங்கள் திறக்கப்படுவதும், கொரோனா அதிகமானால் மீண்டும் மூடப்படுவதுமாக உள்ளது.
இந்நிலையில் கூகிள் நிறுவனம் தனது பணியாளர்கள் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்து வருகிறது. அந்த வகையில் வீட்டிலிருந்தே பணி செய்யும் நடைமுறையை அடுத்த வருடம் ஜனவரி வரை கூகிள் நீடிப்பதாக அறிவித்துள்ளது.