கர்நாடகா இயற்கை ஆர்வலரான டி.வி.கிரிஷை மதுபோதை கும்பல் ஒன்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகவை சேர்ந்த காட்டுயிர் புகைப்படக்காரரான டி.வி.கிரிஷ் தீவிரமான இயற்கை ஆர்வலரும் கூட.. இந்திய வனங்களை பாதுகாத்தலின் அவசியம் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பல இயற்கை பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் கிரிஷிற்கு கர்நாடக அரசு ராஜ்யத்சவா விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
சமீபத்தில் சிக்மங்களூரு பகுதியில் கிரிஷ் மற்றும் அவரது துணை புகைப்படக்காரர்கள் சென்றபோது அந்த பகுதியில் சில இளைஞர்கள் மது அருந்தி விட்டு அங்கிருந்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. இதை கிடிஷ் கண்டிக்கவே அங்கே வைத்து மதுபோதை கும்பல் கிரிஷையும் உடனிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.
இதைக்கண்ட அப்பகுதி கிராம மக்கள் போதை கும்பலிடமிருந்து கிரிஷை மீட்டுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் போதை கும்பலை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.