Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்றால் என்ன? இது ஏன் நடத்தப்படுகிறது?

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்றால் என்ன? இது ஏன் நடத்தப்படுகிறது?
, புதன், 6 பிப்ரவரி 2019 (19:04 IST)
ஐ.நா-வின் கணக்குப்படி, 20 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்படுகிறார். உலகில் வாழும் 200 மில்லியன் பெண்களுக்கு இந்த கொடுமை நிகழ்கிறது. பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவர இதற்கான சர்வதேச தினம் இன்று (பிப்ரவரி 6) அனுசரிக்கப்படுகிறது.
 
வயது வந்த பெண்கள், சிறுமிகளின் பிறப்புறப்பு சிறு வயதிலேயே சிதைக்கப்படுகிறது. சில சமயம் குழந்தைகளாக இருக்கும் போது சிதைக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் வரலாம்.
 
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு என்றால் என்ன?
இந்த சடங்கு 'காஃப்டா' என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா விளக்கம் கூறுகிறது. இது பெரும்பாலும் பெண்களின் விருப்பத்திற்கு மாறாகவே செய்யப்படுகிறது.
webdunia
ஏன் இது பழக்கத்தில் உள்ளது?
பெண்களை திருமணத்திற்கு தயார் செய்ய, ஆண்களின் உடலுறவு சுகத்தை அதிகரிக்கவென பல மூட  நம்பிக்கைகள் இதனுடன் பின்னி பிணைந்துள்ளது. பெண் பிறப்பு சிதைப்பு செய்யப்படும் சமூகத்தில் அந்த பழக்கத்திற்கு உள்ளாகாத பெண்கள் அசுத்தமானவர்களாக கருதப்படுகிறார்கள்.
 
இந்த பழக்கமானது எங்கெல்லாம் உள்ளது?
ஆப்ரிக்கா முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும், ஐரோப்பா, வட மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் குடியேறிய சில சமூகங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வின்னரை வளைத்து போட்ட காங்கிரஸ் கட்சி