Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்; அதிரடி காட்டிய தேவசம் போர்ட்

Advertiesment
Sabarimalai
, புதன், 6 பிப்ரவரி 2019 (14:50 IST)
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்; என்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு  கிளம்பி போராட்டங்கள் நடந்தன. சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஆட்சேபணை இல்லை என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு கூறியிருந்தாலும் கோவிலின் தேவஸ்தானம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடி வந்தது.
 
மேலும் சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தங்களது  நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மேலும் எந்த வழக்கமும்,  சம்பிரதாயமும் சம உரிமையை பறித்தால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறியுள்ளது. 
 
சீராய்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும், சபரிமலையில் அனைத்து வயது  பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக விசாரணையின்போது தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண்: கடைசியில் நடந்த விபரீதம்