பாம்பின் மீது ஒய்யார சவாரி: தலைக்கு தில்ல பாத்தியா...? வைரல் புகைப்படம்

வியாழன், 3 ஜனவரி 2019 (17:26 IST)
ஆஸ்திரேலியாவில் விசித்திரமான வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதனை புகைப்படமாக எடுத்து ஒருவர் வெளியிட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
ஆஸ்திரேலியாவில் ஒரு புயல் தாக்கியது. அப்போது அந்த பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்த பால் மாக் என்பவர் இந்த விசித்திரமான நிகழ்வை கண்டுள்ளார். 
 
புயல் காரணமாக பல தவளைகள் புல் வெளியில் கிடந்தன. அவற்றில் சில அங்கு புல் தரையில் வேகமாக ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்த பாம்பின் மீது ஒய்யாரமாக சவாரி செய்தன. 
 
இதை வியப்புடன் பார்த்த அவர் இதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம் –அதிர்ச்சி தகவல் !!!