Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மயங்க் அரைசதம், புஜாரா அபார சதம் – முதல் நாளில் இந்தியா 303/4

Advertiesment
மயங்க் அரைசதம், புஜாரா அபார சதம் – முதல் நாளில் இந்தியா 303/4
, வியாழன், 3 ஜனவரி 2019 (12:52 IST)
சிட்னியில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ வரலாற்று சாதனைப் படைக்கும் என்ற நிலையில் இந்தியா உள்ளது. ஆனால் கடைசி டெஸ்ட்டை வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

இப்படப்பட்ட வாழ்வா சாவா போராட்டத்தில் இரு அணிகளும் இருக்க இன்று காலை தொடங்கியது சிட்னி டெஸ்ட். டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் ரோஹித்துக்கு பதிலாக  கே எல் ராகுலும், இஷாந்த் ஷர்மாவுக்குப் பதில் குல்தீப் யாதவும் களமிறக்கப்பட்டனர்.  

தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், மய்ங்க் அகர்வாலும் களமிறங்கினர். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருவதால் 3 வது டெஸ்ட்டில் உட்காரவைக்கப்பட்டு மீண்டும் இந்த டெஸ்ட்டில் வாய்ப்பளிக்கப்பட்ட ராகுல் இம்முறையும் ஏமாற்றமளித்தார். இரண்டாவது ஓவரிலேயே ஹாசில்வுட் வீசியப் பந்தில் ஷான் மார்ஷ் வசம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் வெளியேறினார். அதையடுத்து மயங்க் அகர்வாலோடு புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானமாக விளையாட மயங்க் அகர்வால் ரன் சேகரிப்பில் இறங்கினார்.
webdunia

சிறப்பாக விளையாடிய மய்ங்க் அகர்வால் அரைசதம் அடித்தார். நாதன்  லயன் வீசிய 33 ஓவரின் கடைசிப் பந்தை எதிர்கொண்ட மயங்க், ஸ்டார்க் வசம் கேட்ச் கொடுத்து 77 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கியக் கோஹ்லி புஜாராவோடு இணைந்து கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தார். 23 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் ஹேசில்வுட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதையடுத்து வந்த ரஹானே சிறிது நேரம் தாக்குப் பிடித்து 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானேவுக்குப் பின் வந்த விஹாரியுடன் கைகேர்த்த புஜாரா சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும்.

ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு303 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. புஜாரா 130 ரன்களுடனும் விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோஹ்லி, ராகுல் ஏமாற்றம்; புஜாரா, மயங்க் அரைசதம் - சிட்னியில் இந்தியா ஆதிக்கம்