Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்தி அடைவது என்றால் என்ன...? அவை எப்போது ஏற்படும்...!

சித்தி அடைவது என்றால் என்ன...? அவை எப்போது ஏற்படும்...!
குண்டலனி எனப்படும் மூலாதார சத்தி, மூலாதார சக்கரமாகிய குதஸ்தானத்தில் நாகப்பாம்பு போன்று, ஆனால் அரூப வடிவில்  மண்டலமிட்டுள்ளது.
பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காமல் இருக்கும் பொருள் மனம்தான். உடல் தூங்கும் போது கூட மனமானது கனவு என்னும் வடிவத்தில்  இடைவிடாது செயல்பட்டு கொண்டே இருக்கும். அந்த மனம் உறங்கும்போது குண்டலனி விழித்து எழுகிறது.
 
மனம் விழித்திருந்தாலே குண்டலனி உறங்கப்போய் விடும். இரண்டுமே ஒரே சமயத்தில் விழித்திருக்க முடியாது.ஒன்று உறங்கினால்தான்  மற்றொன்று விழிக்கும்.
 
சித்தர்கள் தியானம், பிராணயாமம் மூலம் மனதை உறங்க செய்து குண்டலனியை விழித்து எழ வைப்பார்கள். அந்த தியானத்தின்போது குண்டலனி சக்தி ஒவ்வொரு ஆதார சக்கரத்தையும் கடந்து மேல் நோக்கி எழும்போது பற்பல உணர்வுகள் உண்டாகும். அவை சமாதி நிலைகள்  எனப்படும்.
 
சம்ம + ஆதி = சமாதி. அதாவது ஆதி பரம்பொருளான பரபிரம்மதிற்கு இணையாக, ஜீவாத்மா - பரமாத்மா என்ற பேதமின்றி சமமாவது என்று பொருள். ஆனால் சமாதி என்ற சொல் இன்று இறந்த மனிதர்களுக்கு கட்டும் கல்லறை என்ற பொருளிலே பயன்படுத்தப்படுகிறது.
 
இதிலும் அர்த்தம் உள்ளது. மண்ணிலே பிறந்து மண்ணிலே வளர்ந்து மண்ணிலே ஓங்கி, மனிதன் மண்ணோடு ஜக்கியமாவதை சமாதி  என்கின்றனர்.
 
குண்டலியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும்போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (03-01-2019)!