வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்யப்பட்ட கட்சியாக இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி நடந்து வந்த நிலையில், மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவருக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களால் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
மேலும் அவாமி லீக் கட்சி தலைவர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை காக்கவும், அவாமி லீக் தலைவர்கள் மீதான புகார்களில் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவாமி லீக்கை தடை செய்வதாக இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K