இந்தியா முழுவதும் பல கோடி EPF பயனாளர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கான மாத ஓய்வூதியத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் மாத ஊதியம் பெறும் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து மாதம் 12 சதவீத தொகை எடுக்கப்பட்டு, அதனுடன் தனியார் நிறுவனமும் ஒரு தொகையை சேர்த்து மாதம் தோறும் பணியாளரின் EPF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை பணியாளரின் பணி ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கவும், அவசர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் கிடைக்கிறது.
அந்த வகையில் தகுதி வாய்ந்த ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியமாக EPF மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. இதை பரிசீலனை செய்துள்ள EPFO ஓய்வூதிய தொகையை மாதம் ரூ.2,500 என உயர்த்த ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூரில் நடைபெற உள்ள இபிஎஃப் குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை, விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K