ஒருநாள் விடாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் கற்பழிக்கப்பட்ட மகள்: தந்தையின் கொடூர செயல்!

ஒருநாள் விடாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் கற்பழிக்கப்பட்ட மகள்: தந்தையின் கொடூர செயல்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (13:42 IST)
அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது மகளை கடத்தி சென்று 19 ஆண்டுகளாக ஒருநாள் விடாமல் தொடர்ந்து கற்பழித்து வந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


 
 
62 வயதான ஹென்றி மிக்கேல் பியட்டே என்ற நபர் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகணத்தில் வசித்து வந்தார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு 11 வயது சிறுமிக்கு தாயாக இருந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமானது. அவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் தவறான பழக்கம் உடைய அந்த பெண் தனது மகளை கணவரிடம் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து அந்த நபரும் ரோசலின் மெக்கின்னிஸ் எனப்படும் அந்த சிறுமியி சேர்ந்து வசித்து வந்தனர். அப்போது அந்த நபர் எனது மனைவியான உனது தாய் என்னை விட்டுவிட்டு ஓடி சென்றுவிட்டதால், இனிமேல் நீ தான் எனக்கு மனைவியாக இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
 
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அந்த சிறுமியை கடந்த 1997-ஆம் ஆண்டு அந்த நபர் கடத்திக்கொண்டு போய் மெக்ஸிகோவில் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் முதல் அந்த சிறுமியை அந்த நபர் தினமும் தொடர்ந்து 19 ஆண்டுகள் கற்பழித்து வந்துள்ளார். இதன் மூலம் அந்த பெண்ணுக்கு தற்போது 9 குழந்தைகள் உள்ளது.
 
அந்த நபரின் கொடுமைகள் மிக அதிகமாக அந்த பெண் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்ற வருடமே தப்பித்து அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தனக்கு நடந்த கொடுமைகளை புகாராக கூறியுள்ளார். இந்த புகாரை பெற்ற போலீசார் கடந்த வியாழக்கிழமை அந்த தந்தையை கைது செய்து அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பினர். தற்போது அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தார்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments