துபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து ஜெர்மனி சென்ற விமானம் ஒன்றில் 500க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த விமானம் ஜெர்மனியில் உள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது பலத்த காற்று அடித்தது. இதனால் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது
இருப்பினும் அந்த விமானத்தின் பைலட் சாதுர்யமான விமானத்தை தரையிறக்கினார். விமானம் தரையிறங்கும்போது சிறிதளவு குலுங்கினாலும், பின்னர் ஓடுதளத்தில் சரியாக பயணித்ததால் எந்தவித விபத்தும் இன்று தரையிறங்கியது.
விமானத்தை பாதுகாப்பாக இறக்கி 500க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.