இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திறுக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாயர் ஜோன்ஸ் என்ற பெண் மருத்துவமனையில் பிரசவத்திர்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ அறையில் சிகிச்சை நடந்துகொண்டிருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் வேறு வழி இன்றி டாக்டர்கள் தங்களது மொபைல் போன் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி அந்த பெண்ணும் பிரசவம் பார்த்துள்ளனர்.
அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து கிளாயர் ஜோன்ஸ் கூறியதாவது, இருட்டில் பிரசவம் பார்த்தது பயமாக இருந்தது. அறை முழுவதும் ரத்தமாய் பேய் படம் போல காட்சி அளித்தது.
எல்லோரும் என் மீது டார்ச் லைட் அடித்து எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. மருத்துவமனை என்னை மரியாதையாக நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.