டவ் சோப் நிறுவனம் நேற்று பேஸ்புக்கில் ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டது. இந்த விளம்பரத்தால் பல கண்டனங்கள் எழுந்ததால் டவ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
அந்த விளம்பரத்தில் டவ் சோப் பயன்படுத்தும் கருப்பு இன பெண் ஒருவர் தன் ஆடையை கழட்டியவுடன் வெள்ளை இன பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்து ஒரு வீடியோவை டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது.
இந்த வீடியோ கடும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரல் ஆனது. அதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதே போல் டவ் நிறுவனத்தை எதிர்த்து பலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனால் வேறு வழியின்றி டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது அதோடு இன ரீதியான விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பும் கேட்டது.