Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேஸ்புக்குக்கு 500 கோடி டாலர் அபராதம் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி !

Advertiesment
பேஸ்புக்குக்கு 500 கோடி டாலர் அபராதம் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி !
, வியாழன், 25 ஜூலை 2019 (08:51 IST)
தனிநபர் தகவல்களை தவறான முறையில் பயன்படுத்திய பேஸ்புக்க்கிற்கு விதிக்கப்பட்ட 500 கோடி டாலர் அபராதத்தால் அதன் பங்குச்சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது. விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், தகவலை திருடியதற்காக மன்னிப்பு கூறியது. இந்த புகாரின் முழு விவரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆனையம் கடந்த மார்ச் மாதம் விசாரனையை தொடங்கியது.

இதனையடுத்து பேஸ்புக்கின் கொள்கைகளில் ஒன்றான தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை என்ற உடன்பாட்டை மீறியதற்காக 500 கோடி டாலர் ( 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி) அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஃபேஸ்புக்கின் தனியுரிமை வழக்கங்களையும், தொழில் அமைப்பையும் மாற்றிக்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முடிவுகளில் மார்க் ஜக்கர்பெர்க்கின் சுதந்திரத்தையும் குறைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக்கின் பங்குகள் ஒரு விழுக்காடு சரிந்து சந்தை மூலதனத்தில் 600 கோடி டாலர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்