செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இருப்பது போல நாசா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகத்தில் பல இடங்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வந்ததற்கான தடயங்கள் உள்ளதாக பலர் கூறிவருகின்றனர். ஆகாயத்தில் அவ்வப்போது பறக்கும் தட்டுக்கள் பறப்பதாகவும், அதிலிருந்து பல வண்ண ஒலிகள் வருவதாகவும் பல அதிகாரபூர்வமில்லாத செய்திகள் வெளிவருகின்றன. இதை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் ஏலியன் காணப்படுவதாக செவ்வாய் கிரகத்தில் செயற்கோளால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. தற்போது இந்த விடியோ வைரலாக பரவி வருகிறது.